எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து குற்றவாளியை பத்து நாள்கள் ஆகியும் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்... குற்றவாளியை கண்டு பிடிப்பதில் சைபர் கிரைம் சோடை போன விவகாரம் பற்றி சற்று விரிவாக காண்போம்...
சென்னையில் கடந்த 8 ஆம் தேதி 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டது...
இதனால் சென்னை மாநகர பள்ளிகளில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பெற்றோர்களும் பதட்டம் அடைந்தனர்... தமிழகம் முழுவதும் இந்த மின்னஞ்சல் மிரட்டல் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது...
ஆனால் வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என்பது ஊர்ஜிதமானது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், பெற்றோர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் இது வெறும் புரளி என கூறியதுடன், குற்றவாளி கூடிய விரைவில் கைது செய்யப்படுவார் என கூறினார்...
தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக 9 வழக்குகள் சென்னை மாநகர காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது...
Proton இமெயில் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பிய குற்றவாளியை பிடிக்க ஐ.பி. அட்ரஸ்சை கொண்டு முயற்சித்த போலீசார், அது இயலாமல் போன நிலையில், சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட Proton நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பி பதிலுக்காக காத்திருந்தது...
Proton நிறுவனமோ, இண்டர்போல் மூலமாக வந்தால் தான் தகவல் தர முடியும் என தெரிவித்த நிலையில், தமிழக காவல்துறை இண்டர்போல் உதவியையும் நாடியது...
ஆனால் இதுவரை எவ்வித துப்பும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் குற்றவாளியை கைது செய்வதில் தமிழக போலீஸ் திணறி வருகிறது...
ஒவ்வொரு முறையும் இது போன்ற சம்பவம் நடைபெறும் பொழுது காவல்துறை உயர் அதிகாரிகள் நிச்சயம் குற்றவாளியை பிடித்து விடுவோம் என கம்பீரமாக தெரிவிக்கிறார்கள்... ஆனால் சைபர் குற்றங்களை பொறுத்தவரையில் குற்றவாளியை பிடிப்பது காவல்துறைக்கு பெரிதும் சவாலாகவே இருக்கின்றது.....
இந்த விவகாரத்தில் சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஜெயா பிளஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்....
இந்த மின்னஞ்சல் பொருத்தவரை புரோட்டான் என்கிற மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது...
ஜிமெயில்,, ஹாட் மெயில்,, போன்றது தான் புரோட்டான் என்கிற மின்னஞ்சல்..... இந்த மின்னஞ்சல் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்தது.. இந்திய காவல்துறை புரோட்டான் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்துள்ளது.. இருந்தாலும் அந்த தகவலை ஏற்று அவர்கள் பதில் கொடுக்க வேண்டும் என்பது நிர்பந்தம் இல்லை என்றார்...
வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்ட இ மெயில் செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே உடனடியாக Proton நிறுவனம் தகவல் தர முடியும் என்றும், ஒருவேளை இமெயில் அனுப்பப்பட்ட பிறகு அந்த இ மெயில் கணக்கையே டெலிட் செய்திருந்தால் அதனுடைய டேட்டா எடுப்பதற்கு மிகவும் சிரமம் தான் என வழக்கறிஞர் கார்த்திகேயன் தெரிவித்தார்...
இந்திய சட்ட திட்டங்களை வைத்து அயல்நாட்டில் இயங்கி வரும் கம்பெனியின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்ற வழக்கறிஞர் கார்த்திகேயன், இதுபோன்று பலமுறை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்த போதும், மிரட்டல் என்பது வதந்தி என்பதை மட்டும் தெரிவித்து விடுவதாக கூறியுள்ளார்...
சட்டத்திற்கு என ஒரு எல்லை உண்டு. ஆனால் சமூக வலைத்தளங்களுக்கு ஒரு எல்லை இல்லாமல் தான் இருக்கின்றது.. தமிழகத்தில் இருக்கக்கூடிய சட்டதிட்டங்களே மற்ற மாநிலங்களில் செல்லுபடியாகமல் இருப்பது தான் உண்மையான நிலை என வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறியுள்ளார்...