பள்ளி கழிவறையில் 9-ஆம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 9-ஆம் வகுப்பு மாணவன் பள்ளி கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தனியார் பள்ளியில் படிக்கும் கவின்ராஜ் என்ற மாணவன் வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு சென்ற நிலையில், சிறுதுநேரத்திலேயே கழிவறை சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் திரும்பாததையடுத்து கழிவறை சென்று பார்த்த சக மாணவர்கள் கவின்ராஜை, மயங்கிய நிலையில் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது மாணவன் இறுந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவன் உயிரிழந்த செய்தியறிந்து மருத்துவமனையை சூழ்ந்து மாணவனை பார்க்க அனுமதி கேட்டு உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மாணவன் உயிரிழப்பு குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day