பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓவிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓவிய ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

கோவையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் ஓவிய ஆசிரியர் ராஜன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பள்ளியில் ஓவிய வகுப்பு மற்றும் யோகா வகுப்பு எடுக்கும் பொழுது தவறாக தொடுவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி முதல்வரிடம் புகாரளித்துள்ளனர். இது குறித்து பள்ளி முதல்வர் அளித்த புகாரின் பேரில் ஓவிய ஆசிரியர் ராஜனை, கைது செய்து காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குறிப்பிட்ட மாணவிகளுக்கு மட்டும் தான் பாலியல் தொல்லை கொடுத்தாரா? அல்லது வேறு மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவையில் சமீபத்தில் 17 வயது சிறுமியை, கல்லூரி மாணவர்கள் 7 பேர்  பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி மறைவதற்குள், தற்பொழுது மீண்டும் ஒரு பாலியல் தொல்லை சம்பவம் அரங்கேறியது  பெரும்  அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day