பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - கைதான சிவராமன் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாலியல் வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த காவேரிப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில், போலி என்சிசி முகாம் நடத்தி 8ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த 19ம் தேதி நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார். போலீசார் கைது செய்ய முயன்றபோது தப்பியோட முயற்சித்த சிவராமன், கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டதால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, தான் கைது செய்யப்படுவோம் என அறிந்து ஏற்கனவே எலி பேஸ்ட் சாப்பிட்டதாக சிவராமன் தெரிவித்ததை அடுத்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். போலி என்சிசி முகாம் நடத்தியபோது மேலும் 13 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்யதாகவும், 36 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் சிவராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது 
குறிப்பிடத்தக்கது.

Night
Day