பாதிரியார் வீட்டில் 80 சவரன் நகைகளை கொள்ளையடித்த இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டையில் பாதிரியார் வீட்டில் 80 சவரன் நகைகளை கொள்ளையடித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை கணேஷ்நகரை சேர்ந்த பாதிரியார் ஜான் தேவசகாயம் வீட்டில் சில நாட்களுக்கு முன் 80 சவரன் தங்க நகைகள் திருடு போனது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மதுரை மாவட்டம் உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கேதீஸ்வரன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 36 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள வைர நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Night
Day