பாலியல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார். 


தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பேட்டி அளித்த அவர், கோவில்பட்டியில் தனியாக இருந்த இளம் பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள், கைது செய்ய நடவடிக்கை எடுத்த இரு காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். இதனால் அவர்களை சுட்டு பிடிக்க நேர்ந்ததாக கூறிய அவர்,  இதுபோன்று பாலியல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Night
Day