பாலியல் புகார் அளித்த சிறுமி மீது அரிவாளால் கொடூர தாக்குதல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து வரும் மதன்குமார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இது குறித்து தாயிடம் சிறுமி தெரிவித்த நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் மதன் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதனிடையே தனது சகோதரன் மதன்குமாரை சிறைக்கு அனுப்பிய சிறுமியை பழிவாங்க நினைத்த உறவினரான பாபு என்பவர் நண்பர்களோடு சேர்ந்த சிறுமியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். இதில் கை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு பட்ட சிறுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். பாலியல் தொல்லை அளித்த தம்பியை போக்சோவில் சிறைக்கு அனுப்பிய ஆத்திரத்தில் அண்ணன் கூட்டாளிகளோடு சேர்ந்த சிறுமியை வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day