எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கங்கா பரமேஸ்வரி நகரை சேர்ந்த இளம் பெண்ணுக்கு, சரித்திர பதிவேடு குற்றவாளியான தென்மலை தென்குமரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் தென்மலை தென்குமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து சிறையில் இருந்து வெளிவந்த தென்மலை தென்குமரன், புகார் அளித்த பெண்ணிற்கு, கொலை மிரட்டல் விடுத்துடன், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மீண்டும் இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக, பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
சரித்திர பதிவேடு குற்றவாளியான தென்மலை தென்குமரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாருக்கு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
தென்மலை தென்குமரன் மீது பாலியல் புகார் கூறியநிலையில், தன் மீதே பொய்யான புகார் அளித்து வழக்குப் பதிவு செய்துள்ளதால், காவல்துறையினரின் மீதான நம்பிக்கை இழந்துவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.