பாலியல் வன்கொடுமை வழக்‍கு : கைதான இளைஞர்கள் புகைப்படங்களை வெளியிட்ட காவலர் அதிரடி மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கில் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் புகைப்படத்தை வெளியிட்ட காவலர், ஆயுதப்படைக்‍கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காங்கேயம் அருகே வெள்ளகோவில் தேர் திருவிழாவில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட 7 இளைஞர்கள் நீதிமன்றக்‍ காவலில் வைக்‍கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 இளைஞர்களின் புகைப்படங்கள் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இளைஞர்களின் புகைப்படத்தை வெளியிட்ட காவலர் ராமராஜன் என்பவர் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Night
Day