பீகாரில் அதிர்ச்சி...போலி மருத்துவரின் சிகிச்சையால் சிறுவன் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் போலி மருத்துவர் ஒருவர் யூடியூப்பை பார்த்து அறுவை சிகிச்சை 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பீகார் மாநிலம், சரண் மாவட்டம் மதுராவில் போலி மருத்துவர் அஜித் குமார் புரி என்பவர் கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வாந்தி மற்றும் வயிற்று வலி காரணமாக 15 வயது சிறுவனை கிளினிக்கிற்கு அழைத்து வந்துள்ளனர்.

சிறுவனுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர், ஆபரேஷன் செய்ய முடிவு செய்தார். இதை பற்றி தங்களின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை, தங்களுடைய ஒப்புதல் பெறவில்லை என்பது சிறுவன் குடும்பத்தினரின் குற்றச்சாட்டு ஆகும். ஆபரேஷன் செய்ய திட்டமிட்ட அந்த போலி மருத்துவர், தன்னுடைய மொபைல் போனில் யூடியூப்பை பார்த்தபடி சிறுவனுக்கு ஆபரேஷன் செய்திருக்கிறார். 

ஆபரேஷன் நடந்து கொண்டிருந்த போது, சிறுவனின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதைப் பார்த்த குடும்பத்தினர், போலி மருத்துவரிடம் இது குறித்து கேட்டு சண்டையிட்டுள்ளனர். ஆபரேஷன் சரிவர செய்யப்படவில்லை என்பதால் போலி மருத்துவர், சிறுவனை பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதனால் பதறிப்போன போலி மருத்துவர், உடலை அங்கேயே விட்டு விட்டு இந்த இடத்தில் இருந்து தப்பியுள்ளார்.

இது குறித்து போலீசில் புகார் அளித்த சிறுவனின் குடும்பத்தினர், தகுதியற்ற மற்றும் அனுபவமற்ற போலி மருத்துவரின் செயலே சிறுவனின் மரணத்துக்கு காரணம் என்று குற்றம் சாட்டினர். இதையடுத்து போலி மருத்துவர் மற்றும் அவரது கிளினிக் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

varient
Night
Day