புதுச்சேரி: வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.15 லட்சம் நூதன முறையில் கையாடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி காரைக்காலில் தனியார் வங்கியில் வாடிக்கையாளர் டெபாசிட் செய்த 15 லட்ச ரூபாய் பணத்தை நூதன முறையில் திருடிய வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர். பிரகார வீதியில் வசித்து வரும் ராஜ ராஜேஸ்வரி, வெளிநாட்டில் கணவர் வேலை பார்த்து அனுப்பிய 45 லட்ச ரூபாயை அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். இவருடைய வீட்டின் கீழ்தளத்தை தனியார் வங்கி ஒன்றிற்கு ராஜ ராஜேஸ்வரி வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், தனது செல்போனுக்கு வரும் வங்கி சேமிப்பு தொடர்பான விவரங்களை அந்த வங்கியில் பணிபுரியும் தட்சிணா மூர்த்தி என்பவரிடம் கேட்டுள்ளார். இதனை பயன்டுத்தி நூதன முறையில் ராஜ ராஜேஸ்வரிக்கு தெரியாமல் தட்சிணா மூர்த்தி 15 லட்ச ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் தட்சிணாமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

varient
Night
Day