பூந்திபோல் உதிரும் தார் சாலை... இரவோடு இரவாக பெயர்த்தெடுத்த மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் அருகே தரமற்ற முறையில் போடப்பட்ட தார் சாலையை இரவோடு இரவாக கிராம மக்கள் பெயர்த்து எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தி போல் உதிரும்  தார் சாலையை போட்டவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அதனை சுட்டி காட்டிய மக்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட மேல் கூர்மாபாளையம் பகுதியில்  ரங்காபுரம் முதல் ராளகொத்தூர் வரை சுமார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார்
2.65 கிலோ மீட்டர் தூரம் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒப்பந்ததாரர் சக்தி கணேஷ் என்பவர் மூலம் 97 புள்ளி 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மேல் கூர்மபாளையம் பகுதியில் தரமற்ற முறையில் தார்சாலை போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், தார்சாலையை இரவோடு இரவாக கைகளாலேயே  பெயர்த்து எடுத்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், ஒப்பந்ததாரர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர், சாலை போடப்பட்டது குறித்து செய்தி பரப்பினால் தங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களை மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

சாலையின் தரம் குறித்து நடவடிக்கை எடுக்காத வட்டார வளர்ச்சி அலுவலர், சாலையை சேதப்படுத்தியதாக தங்கள் மீதே காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் அந்த பகுதி கிராம மக்கள்.

திமுக ஆட்சியில் குறைகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீதே நடவடிக்கை பாயும் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம்.

Night
Day