பெங்களூருவில் நகைக்கடைக்குள் புகுந்து 2 மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே நகைக்கடயில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள கொடிகேஹள்ளி பகுதியில் உள்ள ஹந்தாராம் என்பவரின் நகைக்கடைக்குள் புகுந்த 2 மர்மநபர்கள் நகை வாங்குவது போல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஹந்தாராமை நோக்கி சுட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். நகைக்கடைக்குள் பட்டப்பகலில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day