பெண் காவல் ஆய்வாளரைக் கண்டித்து ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் பெண் ஆய்வாளரை கண்டித்து குடும்பத்தோடு பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாங்குநேரி அருகே உள்ள ஏர்வாடி பகுதியில் முத்துராமன் என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு பொன்னுத்தாய் என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியில் ஒருவர் நினைவு தினத்தை ஒட்டி போலீஸார் கடைகளை அடைக்க சொல்லி உள்ளனர். இதைத்தொடர்ந்து முத்துராமனும் கடையை அடைத்து விட்டு புறப்பட்டு கொண்டிருந்தபோது அங்கு வந்த ஏர்வாடி பெண் ஆய்வாளர் கடுமையான வார்த்தையால் திட்டி அவரின் மைத்துனரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த முத்துராமன் குடும்பத்தினர், ஆய்வாளரை கண்டித்து ஏர்வாடி பேருந்து நிலையம் முன்பாக பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

Night
Day