பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - புதிய விசாரணை கோரி பெற்றோர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கில் சிபிஐ மூலம் புதிய விசாரணை கோரி பெற்றோர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 


கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமைக் கொலை நடந்த நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தநிலையில் தங்கள் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். அதனை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து, மாணவியின் பெற்றோர், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது.  

Night
Day