எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 2 இளைஞர்களை கத்தி மற்றும் கடப்பாறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மற்றொரு தரப்பினர் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பம் ஊராட்சியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாமில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் முன்விரோதம் காரணமாக மோதிக்கொண்டனர். அப்போது, பால்ராஜ், பத்மநாபன் ஆகிய இரண்டு இளைஞர்களை மற்றொரு தரப்பினர் கத்தி மற்றும் கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் உடம்பில் பல்வேறு இடங்களில் அவர்களுக்கு வெட்டு காயங்களும், கால் முறிவும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.