பேருந்துக்குள் இளம் பெண் பாலியல் வன்கொடுமை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஜாமீனில் வெளியே வந்துள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளியான தத்தாத்ரேயா ராம்தாஸ் கதே, பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை நடத்துநனர் எனக் கூறி பேருந்துக்குள் அழைத்துச் சென்று கதவை மூடிவிட்டு பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியைப் பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல் நிலையத்திற்கு 100 மீட்டர் தொலைவில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்ததை அறிந்த உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு பேருந்து நிலையத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

Night
Day