பேருந்து மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தின் மீது ஏறி அட்டகாசம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. பூந்தமல்லியில் இருந்து பிராட்வே நோக்கி செல்லும் 53ம் எண் கொண்ட அரசு பேருந்தின் மேற்கூரையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலையில் பட்டாசு வெடித்தனர். ரூட் தல என கெத்துகட்ட மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபோன்று செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day