பொங்கல் பண்டிகையன்று வீடு புகுந்து ரவுடியை சரமாரியாக வெட்டிக் கொன்ற கும்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை காசிமேட்டில், 10 பேர்கொண்ட மர்ம கும்பல், ரவுடியை வீடு புகுந்து வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசிமேடு திடீர் நகரில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மாலதி என்பவர், உறவினரான ரவுடி லோகநாதன் என்பவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். நேற்றிரவு 10 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்குள் நுழைந்து லோகநாதனை சரமாரியாக வெட்டி கொன்றுள்ளனர். தடுக்கச் சென்ற மாலதியையும் வெட்டியுள்ளனர். இதில் தலையில் வெட்டுபட்டு உயிருக்கு போராடிய மாலதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சென்ற திடீர் நகர் போலீசார், லோகநாதன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்

Night
Day