போலி ஆன்லைன் நிறுவனம் தொடங்கி ரூ.10 கோடிக்கும் மேல் மோசடி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி அருகே பாரதி வீதியை சேர்ந்த சரவணன் குட்வில் என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ஒரு கோடியே 69 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். 


பின்னர் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, கணக்கில் பணம் இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் ஐயங்குட்டிபாளையத்தை சேர்ந்த செளந்தரராஜன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் போலி ஆன்லைன் நிறுவனம் ஆரம்பித்து 10-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களிடம் 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Night
Day