எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே போலி தங்க பிஸ்கெட்டுகள் விவகாரத்தில் பிரபல ரவுடி உட்பட 14 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
தேனி மாவட்டம் தொப்பம்பட்டியை சேர்ந்த கருமலை, உத்தமபாளையத்தைச் சேர்ந்த மணிவண்ணன், முருகன் மற்றும் பல்லடத்தை சேர்ந்த மாரியப்பன் ஆகிய நான்கு பேரும், ஆன்லைனில் பிஸ்கெட்டுகள் வாங்கி, அவற்றை ஒரிஜினல் தங்க பிஸ்கட் என்று கூறி பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டனர். பின்னர் இரண்டு தரகர்கள் மூலம் மகாலட்சுமி நகரில் வைத்து தங்க பிஸ்கெட்டுகளை கைமாற்ற முயன்ற நிலையில் அதனை அறிந்த ரவுடி காசிராஜ் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட கும்பல் தங்க பிஸ்கெட்டுகளை பறித்துச் செல்ல திட்டமிட்டு அங்கு வந்துள்ளனர். இதுகுறித்த தகவலறிந்த போலீசார் அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கார் மற்றும் மற்றும் போலி தங்க பிஸ்கட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.