போலீசார் மீது காரை ஏற்றி தப்பிய கஞ்சா கடத்தல் கும்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கஞ்சா கடத்தி சென்றவர்களை மறித்த போலீசார் மீது மர்ம நபர்கள் காரை ஏற்றி தப்பிச்சென்ற அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணவரம் பகுதி வழியாக காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி போலீசார் கிருஷ்ணவரம் சுங்கச்சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த சம்பவத்தில் தொடர்புடைய காரை மடக்கி பிடிக்க முயன்றபோது, கடத்தல்காரர்கள் போலீசார் மீது காரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால்  2 போலீசார் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து சம்பந்தப்பட்ட காரையும், மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Night
Day