மகன், மகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த வரலட்சுமி, கணவர் காணாமல் போனதால் மகன் யுவராஜ், மகள் ஜனனி ஆகியோருடன் வேலைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு கேராளாவுக்கு ரயில் மூலம் புறப்பட்டுள்ளார். அப்போது அவர்களின் உடைமைகளை யாரோ திருடி சென்றதால் வேறு வழியின்றி கோவை போத்தனூர் பகுதியில் மூவரும் இறங்கியுள்ளனர். பின்னர் உணவுக்கு கூட வழியில்லாமல் மிகுந்த துயரத்தில் இருந்த அவர்கள், தண்டவாளத்தில் நடந்தே கோவை ரயில் நிலையம் வந்துள்ளனர். அங்கே நீண்ட நேரம் இருந்த மூவரும், நேற்று மாலை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இருப்பு பாதை போலீசார் உடல்களை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day