மகாராஷ்ட்ரா: பணத்திற்காக மாணவியை கொன்ற 3 சக மாணவர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்ட்ரா அருகே பணத்திற்காக உடன் படிக்கும் மாணவியை சக மாணவர்கள்
கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ட்ர மாநிலம் லாத்தூரைச் சேர்ந்த பாக்யஸ்ரீ என்ற மாணவி புனேவிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பாக்யஸ்ரீ புனேவிலுள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்ற போது, ஒரு மர்ம கும்பல் அவரை கடத்தி வைத்து, பெண்ணின் பெற்றோரிடம் 9 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் போலீசில் புகாரளிக்க, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெண்ணின் நண்பர்களான சிவம் புல்வாலே மற்றும்  சாகர் ஜாதவ், சுரேஷ் இந்துரே ஆகியோர் பணத்திற்காக பாக்யஸ்ரீயை கொலை செய்தது தெரியவர, 3 பேரையும் கைது செய்தனர்.

Night
Day