மதுரை: 10 சவரன் நகைக்காக பார்வை மாற்றுத்திறனாளி பெண் கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை 48 மணிநேரத்தில் கைது செய்த காவல்துறையினருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர். சக்கிமங்கலம் அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள பார்வையற்றோர் காலனியில் 50க்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கவிதா என்ற பார்வை மாற்றுத்திறனாளி பெண் 10 சவரன் நகைக்காக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட அதே பகுதியை சேர்ந்த கலையரசி, சிவானந்தம் ஆகியோரை காவல்துறையினர் 48 மணி நேரத்தில் கைது செய்தனர். இதனால் மாற்றுத்திறனாளிகள், காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்ததோடு, தங்கள் பகுதியில்  ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Night
Day