மனைவியை துண்டு, துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த கணவன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவி கொன்று துண்டு துண்டாக வெட்டி அதனை குக்கரில் வேக வைத்த கொடூர கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஐதராபாத்தில் முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி, மனைவி வெங்கட மாதவியுடன் வசித்து வந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சங்கராந்தி பண்டிகைக்காக தனது பிள்ளைகளை மாமியார் வீட்டிற்கு அனுப்பிய நிலையில், மீண்டும் மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து துண்டு துண்டாக உடலை வெட்டி வீட்டில் உள்ள பிரிட்ஜில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் எலும்புகளை எப்படி கரைப்பது என யூடியூபில் பார்த்து சோதனை முயற்சியாக நாய் ஒன்றை அடித்து கொன்று அதன் எலும்புகளை கரைத்து அருகில் உள்ள கால்வாயில் கரைத்துள்ளார்.

அதேபோன்று மனைவியின் எலும்பையும் குக்கரில் வேக வைத்து பின்னர் பொடியாக்கி அதே கால்வாயில் கரைத்து, மீதமுள்ள எலும்புகளை அருகில் உள்ள ஏரியில் வீசியுள்ளார். இந்நிலையில் மகளை காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குருமூர்த்தியை விசாரித்த போதுதான் இந்த திடுக்கிடும் தகவல் வெளியானது.  இதனையடுத்து குருமூர்த்தியை கைது செய்த போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

Night
Day