மயிலாடுதுறை: பணம் கேட்டு இளைஞரை மிரட்டிய காவலர் பணியிடை நீக்கம் - மாவட்ட எஸ்பி நடவடிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக்கூறி இளைஞரை மிரட்டிய காவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சீர்காழி பிரதான சாலையில் இரு சக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் பணம் கேட்டு காவலர் பிரபாகரன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஆடியோ இணையத்தில் வைரலான நிலையில், காவலர் பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டுள்ளார். 

varient
Night
Day