மயிலாப்பூர் நிதிநிறுவன இயக்குநர் தேவநாதன் வீட்டில் 3 கிலோ தங்கம் பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மயிலாப்பூரில் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட் என்ற  நிதி நிறுவனத்தை தேவநாதன் யாதவ், 144 முதலீட்டாளர்களிடமிருந்து ரூபாய் 24.5 கோடி பெற்று ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 27 வங்கி கணக்குகளை முடக்கம் செய்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்துள்ளனர்.

3 கிலோ தங்கம்

தேவநாதன் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் 3 கிலோ தங்கத்தை கைப்பற்றியுள்ளனர். மோசடி தொடர்பாக மயிலாப்பூரில் உள்ள அலுவலகத்துக்கு தேவநாதனை அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

Night
Day