எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென்காசி மாவட்டம் புளியங்குடியில், பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்....
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள அரசு உதவி பெரும் தனியார் மேல்நிலைப் பள்ளி, தமிழ் வழி கற்றல் மற்றும் ஆங்கில வழி கற்றல் என இரு மொழிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆண் - பெண்கள் என சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் பள்ளி முடிந்த நிலையில் பத்து , பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரவு நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடந்தப்பட்டு வந்தாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் இரவு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுள்ளது. அதில் பன்னிரெண்டாம் வகுப்பை பயிலும் முப்பதுக்கும் மேற்பட்ட மாவணவர்கள் கலந்து கொண்ட நிலையில், அதில் ஒரு மாணவனை வகுப்பாசிரியர் பிரான்சிஸ் என்பவர் தனி அறைக்கு அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவன் சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டிற்கு சென்று, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்.
இதனை அடுத்த மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததை தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர், நடந்த சம்பவம் குறித்து பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த புளியங்குடி காவல்துறையினர், ஆசிரியர் பிரான்சிஸ் என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆசிரியர் பிரான்சிஸ் என்பவர் சிறப்பு வகுப்பிற்கு வரும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக பள்ளி தலைமையாசிரிடம் பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர் நியாயம் கேட்டு பேசும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் ஆசியரியர் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தது தவறு என்றும், இதனால் உங்கள் வேலைக்கு ஆபத்து வரும், நியாயமாக விசாரித்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அரசு உதவி பெரும் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை இரவு சிறப்பு வகுப்புகளுக்கு வரவழைத்து, வகுப்பாசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம், தென்காசி மாவட்ட மக்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.