எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில் மாணவியை கர்ப்பமாக்கிய பல்கலைக்கழக உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
மேலக்கோட்டையூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் குமார் என்பவரும், இரண்டாமாண்டு மாணவி ஒருவரும் கடந்த 2 வருடங்களாக நெருக்கமாக பழகி வந்ததாக தெரிகிறது. இதனால் மாணவி கர்ப்பமடைந்த நிலையில் கருவை கலைப்பதற்காக படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு, உடல்நிலை மோசமாகியுள்ளது.
இதையடுத்து மாணவியை சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தாழம்பூர் போலீசார் வழக்கு பதிந்து உதவிப் பேராசிரியர் ராஜேஷ் குமாரை கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ராஜேஷ்குமாருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உதவி பேராசிரியர் ஒருவருடன் திருமணம் நடந்ததாகவும், முன்னதாக மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கியதும் தெரியவந்தது.