முதியவரை கொலை செய்த வழக்கில் ஒருவர் கைதான நிலையில் 2 பேர் சரண்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே முதியவரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரில் ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில் மேலும் 2 பேர் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 

கிளாப்பாளையத்தை சேர்ந்த சத்யா என்ற பெண்ணிடம் அப்பகுதியை சேர்ந்த அருள் என்ற இளைஞர் தகராறு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் சத்யாவின் உறவினர்களான கவியரசன், சிலம்பரசன் ஆகிய இருவரும் அருளை தேடி சென்றனர். அப்போது, அருளின் உறவினரான முதியவர் நாராயணனை கவியரசன், சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர் செந்தில் கொலை செய்து விட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 3 பேரும் தலைமறைவாக இருந்த நிலையில் செந்திலை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கவியரசன், சிலம்பரசன் உளூந்தூர் நீதிமன்றத்தில்   சரணடைந்தனர். முதியவர் கொலை சம்பவத்தில் 3 பேரும் கைதாகியுள்ள நிலையில் மூவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு அளித்துள்ளனர்.

Night
Day