முதியவர் நிலம் மோசடி - மேட்டுப்பாளையம் 22-வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் நவீன் அராஜகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் முதியவரின் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து திமுக கவுன்சிலர் அராஜகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

மேட்டுப்பாளையம் ஆசிரியர் காலனியில் வசித்து வரும் கிருஷ்ணசாமி என்ற 85 வயது முதியவர், காரமடையில் உள்ள தனது 80 சென்ட் நிலத்தை விற்பனை செய்து தருமாறு 22-வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் நவீனிடம் கேட்டுள்ளார். இதற்காக 2022-ம் ஆண்டு நிலத்தை விற்பனை செய்யும் அதிகாரத்தை பெற்றுக்‍கொண்ட நவீன், நிலத்தை விற்பனை செய்த பிறகு பணத்தை தருவதாக கூறியுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நவீன் போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவாளர் அதிகாரிகள் உதவியுடன், நவீனின் தாயார் பெயரிலும், நண்பர் பெயரிலும் 80 சென்ட் நிலத்தை பிரித்துக்‍கொண்டுள்ளார். பணம் அல்லது நிலத்தை தருமாறு கூறியதற்கு நவீன் மிரட்டல் விடுத்ததால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி இது பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்‍கை எடுக்‍கவில்லை என கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆட்சியரும், மாவட்ட கண்காணிப்பாளரும் தலையிட்டு தனது பிரச்னைக்‍கு தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளார்.

Night
Day