ரயிலை கவிழ்க்க சதி திட்டம் - செல்போன் டவர்களில் பதிவான எண்களை ஆய்வு செய்ய போலீசார் முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி அருகே ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்ட விவகாரத்தில், 5 நாட்களாகியும் தடயங்கள் கிடைக்காததால் செல்போன் டவர்களில் பதிவான எண்களை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். திருவனந்தபுரத்தில் இருந்து காந்திதாம் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. பார்வதிபுரம் பகுதியில் வந்தபோது ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் இருப்பதை கண்டு சுதாரித்துக் கொண்ட லோகோ பைலட் ரயிலின் வேகத்தை குறைதுள்ளார். இருப்பினும் ரயில் பலத்த சத்தத்துடன் பாறை மீது மோதியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 5 நாட்களாகியும் தடயங்கள் எதுவும் கிடைக்காததால், செல்போன் டவர்களில் பதிவான எண்களை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Night
Day