க்ரைம்
சுரேஷ் ராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எதிரான நில மோசடி வழக்கை ரத்து செய்ய செ?...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்த பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உட்பட 7 பேரும் உச்சநீதிமன்றத்தால் விடுதலை பெற்றநிலையில், இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார். தண்டனை பெற்று விடுதலை ஆன தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என இந்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து வந்தார். இந்நிலையில் திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள சாந்தனை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அரசு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு அனுப்பி உள்ளது. இதன்படி, இன்னும் இரண்டு நாட்களுக்குள் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எதிரான நில மோசடி வழக்கை ரத்து செய்ய செ?...
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் - சிறப்பு நிகழ்ச்சி - தொகுப்பு 3