ராஜேஷ்தாஸ் நீதிமன்றத்தில் உடனே சரணடைய உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டணை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும் ராஜேஷ்தாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே இன்றைய விசாரணையின்போது, ராஜேஷ் தாஸ் சரணடைவதில் இருந்து விலக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், உடனடியாக, விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.

Night
Day