க்ரைம்
பாலியல் புகார் அளித்த சிறுமி மீது அரிவாளால் கொடூர தாக்குதல்..!
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நடந்த கொள்ளை தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 56 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். தென்னந்தியாலம் பகுதியை சேர்ந்த சிட்டிபாபு என்பவரின் வீட்டில் கடந்த மாதம் 30-ஆம் தேதி 75 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, 2 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொள்ளை தொடர்பாக செஞ்சியை சேர்ந்த ஐயப்பன் மற்றும் கண்ணதாசன் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 56 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 95 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து, இருவரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...