ராமநாதபுரம்: காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மீது கொலை வெறி தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் அருகே பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மீது அவரின் உறவினர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. பரமக்குடியில் உள்ள புதுநகர் பகுதியில் வசித்து வரும் ஷாலினி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனது பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி சேதுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது சேதுபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், 2 நாட்களுக்கு முன்பு தனது குழந்தையுடன் புது நகரில் உள்ள தனது கணவரின் சகோதரி வீட்டுக்கு ஷாலினி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஷாலினியின் உறவினர்கள் அங்கிருந்த பெண்களை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஷாலினி தனது உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

Night
Day