ரூ.2 ஆயிரம் கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கு : ஜாபர்சாதிக் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகிய ஜாஃபர் சாதிக்கின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

வெளிநாடுகளுக்கு உணவுப்பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதை பொருள் கடத்தி 2ஆயிரம் கோடி வருமானம் ஈட்டிய வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக செயல்பட்ட திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து நேற்று அவரது மனைவி ஹமீனாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஜாஃபர் சாதிக்கின் சகோதரர் சலீம் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். 

Night
Day