எழுத்தின் அளவு: அ+ அ- அ
தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே வட்டிக்கு பணம் கேட்ட இளம் பெண்ணுக்கு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பர்வின் திரையரங்கம் அருகே வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆரோக்கிய சாமி. இவர் தற்போது வட்டிக்கு பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வருகிறார். இவர் பெரும்பாலும் பெண்களை மட்டுமே குறி வைத்து வட்டிக்கு பணம் தருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வட்டிக்கு 15 ஆயிரம் ரூபாய் கேட்ட இளம் பெண்ணிடம் ஆரோக்கிய சாமி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அவர், வட்டிக்கு பணம் தருவதாக கூறி, அவரது வீட்டிற்கு வந்து பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் வட்டிக்கு பணம் தருவதாக கூறி, பல பெண்களிடம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆரோக்கிய சாமி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.