வழக்கறிஞருக்கு வெட்டு - சைதாப்பேட்டையில் வழக்கறிஞர்கள் சாலைமறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்டதைக் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம் முன் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஓசூர் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் கண்ணன் என்பவரை சக வழக்கறிஞரே ஓட ஓட வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து, வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பில்லையென கூறி, சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம் முன் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணிகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்த வேண்டும் எனக் கோரி முழக்கங்களை எழுப்பினர். வழக்கறிஞர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

Night
Day