விசிக நிர்வாகியை பிடிப்பதில் போலீசார் மெத்தனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில், சலூன் கடை ஊழியர் மீது விசிக பிரமுகர் கொலை வெறித் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள லைம் ட்ரெண்ட்ஸ் என்ற சலூன் கடை ஊழியரான அஜித்குமார், நேற்றிரவு தனது பணியை முடித்துவிட்டு சக ஊழியருடன் இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்றார். அப்போது அருகாமையில் நின்றிருந்த கார் திடீரென பின்னோக்கி வந்து இருசக்கர வாகனத்தில் மோதியது. இதனை தட்டிக் கேட்ட அஜித்குமாரை, காரில் இருந்து இறங்கிய விசிக பிரமுகர் அருண்குமாரும், அவரது நண்பர்களும் சாலையில் வைத்தும், கடைக்குள் நுழைந்த அஜித்குமாரை கடைக்குள் வைத்தும் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிராமிய போலீசார், அருண்குமார் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். 

Night
Day