விருதுநகர்: அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் சிசு உயிரிழப்பு என புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்ததாக கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.ராஜபாளையம் அம்மன்பொட்டல் தெருவைச் சேர்ந்த கர்ப்பிணியான இசக்கி, தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்துவிட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றள்ளார். அப்போது, அரசு மருத்துவர் ஸ்கேன் அறிக்கையை பார்க்காமலேயே குழந்தை வயிற்றில் நலமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இசக்கியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது குழந்தை வயிற்றிலேயே உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டுமென இசக்கியின் கணவர் ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Night
Day