க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 3 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். த்தூர் கம்பிகுளம் கண்மாய் பகுதியில் தளவாய்புரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் இருந்து 3 டிப்பர் லாரிகளில் அனுமதியின்றி சவுடு மண் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து 26 யூனிட் மண்ணுடன் 3 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக மணி, சேது மற்றும் துரை ஆகிய 3 பேர்மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே லாரிகள் செல்ல தடையாக இருந்ததாக 40 பனைமரங்களையும் 3 பேரும் வெட்டி சாய்த்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...