வீட்டிற்கு புதிய மின் இணைப்பு வழங்க ரூ.18,000 லஞ்சம் கேட்ட மின் ஊழியர்கள் 2 பேர் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில்  பல்வேறு இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

கோவையில் புதிதாக மின் இணைப்பு கொடுக்க 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ரத்தினபுரியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் வீடுகளுக்கு 6 புதிய மின்இணைப்புகள் கேட்டு விண்ணப்பித்த நிலையில், மின்இணைப்பு வழங்க போர்மேன் ஹாரூன் என்பவரர் 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதிகாரிகளிடன் அறிவுரைப்படி,  லஞ்சம் கொடுக்க முன்வந்த ராஜ்குமார், போர்மேன் ஹாரூனிடம் பணத்தை வழங்கியுள்ளார். அப்போது லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  கையும் களவுமாக பிடித்தனர். 
    

Night
Day