வீட்டை சூறையாடிய தலைமை ஆசிரியரை கைது செய்ய, பாதிக்கப்பட்ட ஆசிரியை எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அடியாட்களுடன் வந்து தனது வீட்டை சூறையாடிய தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட ஆசிரியை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சப்பா நகரை சேர்ந்த பிரபா என்பவர், ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டை அடமானம் வைத்து, தலைமையாசிரியர் முத்துராமசாமியிடம் 15 லட்சம் ரூபாய் வட்டிக்கு பெற்றுள்ளார். இவர் அசல் மற்றும் வட்டியை செலுத்திய நிலையில், வீட்டு ஆவணங்களை தர மறுப்பதாக ஆசிரியை பிரபா, ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். இதில் ஆத்திரமடைந்த முத்துராமாசாமி, கடந்த 16ம் தேதி அடியாட்களுடன் தனது வீட்டிற்கு வந்து டிவி, பிரிட்ஜ் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதாகவும், தனது தாய் மற்றும் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவு உட்பட 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

varient
Night
Day