ஸ்டிங்க் ஆன்மிக சுற்றுலா வந்த பிரான்ஸ் பெண்... மலைக்கு அழைத்து சென்று சீரழித்த டூரிஸ்ட் கைடு...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலைக்கு ஆன்மிக சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு பெண்ணை முக்தி கிடைக்க வழிகாட்டுகிறேன் என ஏமாற்றி அழைத்துச்சென்று, TOURIST GUIDE பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆன்மீக பூமியான திருவண்ணாமலைக்கு தியான பயிற்சி எடுக்க வெளிமாநிலங்கள் மட்டுமின்றி பல நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன்படி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் முதல் திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஆசிரமத்தில் தங்கி ஆன்மீகம் மற்றும் தியான பயிற்சிகளை மேற்கொண்டதாக தெரிகிறது. 

இந்தநிலையில் வாழ்க்கையில் முக்தியடைய வழிகாட்டுவதாக ஆசைக்காட்டி பிரான்ஸ் பெண்ணை திருவண்ணாமலையின் தீப மலைக்கு அத்துமீறி அழைத்துச்சென்றிருக்கிறார் TOURIST GUIDE வெங்கடேஷ். 

சுமார் 2 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்டது திருவண்ணாமலையின் தீப மலை. இதில் 700 அடி உயரத்தில் அமைந்துள்ளது கந்தாஸ்ரமம் குகை. ரமண மகரிஷி தங்கியிருந்த சிறப்பு மிக்க இந்த கந்தாஸ்ரமம் குகையில் தியானம் செய்தால் முக்தி கிடைக்கும் என பிரான்ஸ் பெண்ணிடம் பல கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறான் TOURIST GUIDE வெங்கடேஷ். நெற்றியில் விபூதி பட்டை அடித்துக்கொண்டு பல புராண இதிகாசங்களை எடுத்துக்காட்டாக கூறிய TOURIST GUIDE வெங்கடேஷின் கட்டுக்கதைகளையெல்லாம் உண்மை என்றே நம்பியிருக்கிறார் பிரான்ஸ் பெண். 

இந்தநிலையில் தான் தீபமலை மீது பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி பிரான்ஸ் பெண்ணை மலை மீது அழைத்துச்சென்று காமகளியாட்டம் ஆடியிருக்கிறான் TOURIST GUIDE வெங்கடேஷ். இதையடுத்து மலையில் இருந்து தப்பி வந்த பிரான்ஸ் பெண், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் அளிக்க, தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், TOURIST GUIDE வெங்கடேஷை கைது செய்தனர். 

திருவண்ணாமலையின் தீபமலை வனத்துறையின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் வனத்துறையில் கண்காணிப்பையும் மீறி வெளிநாட்டு பெண்ணுக்கு இப்படியொரு கொடுமை நிகழ்ந்திருப்பது புனித பூமியான திருவண்ணாமலைக்கு மட்டுமின்றி நாட்டிற்கே அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

ஆன்மீக பூமி என போற்றப்படும் திருவண்ணாமலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே கண்காணிப்பை தீவிரப்படுத்தி பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  

Night
Day