11-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை - கிக் பாக்சிங் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா நகரில் 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கிக் பாக்சிங் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அண்ணா நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் கிக் பாக்சிங் மையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சக ஊழியரான சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த நைனா முகம்மது என்பவர்,  இளம்பெண்ணின் சகோதரியுடன் நெருங்கி பழகி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் 11-ஆம் வகுப்பு படிக்கும் அம்மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவியின் தாயார் திருமங்கலம் மகளிர் போலீசில் புகாரளித்தார். அதன்படி, நைனா முகம்மது மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Night
Day