13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


ஆட்டோ ஓட்டுநரான ஜாபர்ஷெரிப் கடந்த 2019-ம் ஆண்டு 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமி மாயமானது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவரை மீட்ட போலீசார், ஜாபர் ஷெரீப்பை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஜாபர் ஷெரீப்புக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார். 

Night
Day