3 பேர் கொண்ட கும்பலால் பேட்மிண்டன் பயிற்சியாளர் வெட்டி படுகொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அம்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே 3 பேர் கொண்ட கும்பலால் பேட்மிண்டன் பயிற்சியாளர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த பச்சையம்மாள்-ராஜு தம்பதியரின் மகன் தினேஷ் பாபு பேட்மிண்டன் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் பேட்மிண்டன் கோச்சிங் அலுவலகத்திற்கு வந்த போது, அங்கு மறைத்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் தினேஷ் பாபுவை முகம், கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே தினேஷ் பாபு உயிரிழந்தார். கொலை சம்பவம் தொடர்பாக 10 பேரை கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், முதற்கட்டமாக 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Night
Day