HI BOX செயலி மூலம் ரூ.500 கோடி மோசடி - முக்கிய நபர் கைது - வங்கி கணக்கு முடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் 500 கோடி ரூபாய் மோசடி செய்த Hi Box செயலி மோசடி குழுவை சேர்ந்த முக்கிய நபர் சென்னை வண்ணாரப்பேட்டையில் கைது செய்யப்பட்டார்.

தினசரி ஒன்று முதல் 5 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என நம்பி 30 ஆயிரம் மக்கள், Hi Box செயலியில் முதலீடு செய்த நிலையில், கோடிக்கணக்கில் பணம் ஏமாற்றப்பட்டதாக புகார்கள் குவிந்தன. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த டெல்லி சைபர் கிரைம் போலீசார், சென்னை வண்ணாரப்பேட்டையில் அலுவலகம் நடத்தி வந்த சிவராம் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரது வங்கி கணக்கையும் முடக்கப்பட்டு 18 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சிவராமனை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவுள்ளனர். 

Night
Day